• Latest News

    March 03, 2015

    கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் ஆம்லா

    அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா குறைந்த போட்டியில் 20 சதங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.உலகக்கிண்ணத் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
    இது ஆம்லாவின் 20வது சதம் ஆகும். ஆம்லா தனது 20வது சதத்தை 108வது இன்னிங்சில் பூர்த்தி செய்துள்ளார். இதனால் ஒருநாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 20வது சதம் விளாசிய வீரர் என்ற பெருமை ஆம்லாவுக்கு கிடைத்துள்ளது.
    முன்னதாக இந்திய அதிரடி வீரர் விராட் கோஹ்லி 133 இன்னிங்சுகளில் 20வது சதத்தை பூர்த்தி செய்ததுதான் இதற்கு முன்பு சாதனையாக இருந்து வந்தது. தற்போது அந்த சாதனையை ஆம்லா முந்தியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கோஹ்லியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்தார் ஆம்லா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top