(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயத்தின் முப்பெரும் விழா 16-03-2015 இன்று திங்கட்கிழமை இக்றஃ வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பூநொச்சிமுனை வரலாறு,பாடசாலையின் 50வது நிறைவு,அதிபர் ஏ.பீ.எம்.றஸூலின் 25 வருட கல்விச் சேவைப் பூர்த்தி போன்ற விடயங்களை மையப்படுத்தி இடம்பெற்ற இவ் முப்பெரும் விழாவில் கௌரவ அதிதிகளாக ஒய்வு பெற்ற அதிபரும்,முன்னாள் காதி நீதிபதியுமான எம்.எம்.எம் .மஹ்ரூப் கரீம், ஒய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபி ,ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) ,காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி மன்சூர் (பலாஹி) ஆகியோர் பூநொச்சிமுனை வரலாறு மற்றும் இக்றஃ வித்தியாலயத்தின் வரலாறு ,இக்றஃ வித்தியாலயத்தின் அதிபர் ஏ.பீ.எம்.றஸூலின் சேவை தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.
இக்றஃ வித்தியாலயத்தின் அதிபர் அதிபர் ஏ.பீ.எம்.றஸூல் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பாடசாலைகளின் அதிபர்கள்,ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் மே மாதமளவில் பூநொச்சிமுனை வரலாறு,பாடசாலையின் 50வது நிறைவு,அதிபர் ஏ.பீ.எம்.றஸூலின் 25 வருட கல்விச் சேவைப் பூர்த்தி போன்ற விடயங்களை மையப்படுத்தி ஒரு நூல் வெளியிடப்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment