• Latest News

    June 11, 2023

    மீனவர்களின் எச்சரிக்கையையும் மீறி மீனை சமைத்து சாப்பிட்ட பெண் மரணம். அவரது குடும்பம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

    இலங்கையில் பெண்ணொருவர் மீனவர்களின் எச்சரிக்கையை மீறி கரையொதுங்கிய ஆபத்தான மீனை எடுத்து சென்று சமைத்து சாப்பிட நிலையில் தற்போது குடும்பமே வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

    இலங்கையில் மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயது குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் 27 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் எனைய 3 பேரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கனடாவுக்கு செல்லவிருந்த குடும்பம்: பெண்ணை எச்சரித்த மீனவர்கள்: மட்டக்களப்பில் சோக சம்பவம் | Fishermen Warn Woman In Batticaloa Fish Dead

    கடற்கரையில் ஒதுங்கிக் காணப்பட்ட மிகவும் கொடிய நஞ்சுகொண்ட மீனை பெண்மணி எடுக்கும் போது மீனவர்கள் அது சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    இருந்தாலும் இல்லை நான் இதை யூடியூப் காணொளிகளில் சமைத்து சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன் எனவே பிரச்சனை இல்லை வெளிநாடுகளில் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள் எனக் கூறிவிட்டு அந்த மீனை எடுத்துச் சென்றுள்ளார்.

    கணவன் கனடா நாட்டில் வாசித்து வரும் நிலையில் குழந்தைகளுடன் இன்னும் 10 நாட்களில் வரும் இருபதாம் தேதி கனடாவுக்கு செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை எல்லாம் பதிவு செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thanks JVP News

    https://jvpnews.com/article/fishermen-warn-woman-in-batticaloa-fish-dead-1686480280 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீனவர்களின் எச்சரிக்கையையும் மீறி மீனை சமைத்து சாப்பிட்ட பெண் மரணம். அவரது குடும்பம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top