காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடன் அங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு வெறுமனே புத்தக கல்வியை மாத்திரம் வழங்குவது என்பதற்கு அப்பால் நடைமுறை ரீதியாக அவர்களை பயிற்றுவிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது.
அந்த தொடரில் மாணவர்களை மாதாந்தம் ஒரு களச்சுற்றுலா அழைத்துச் செல்வதென தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்திவருகிறது.
அந்த வகையில் இன்று 19.03.2015 பிஸ்மி கின்டர்காடன் மாணவர்கள் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு மாணவர்களுக்கு வைத்திய அதிகாரிகளால் வைத்தியசாலை குறித்தும் அது சமூகத்துக்கு ஆற்றி வரும் சேவை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வைத்திசாலையில் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கள் வகுப்பு மாணவி ஒருவரையும் மாணவர்கள் தரிசித்தனர்.
கடந்த மாதம் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்கள் காத்தான்குடி பொது நூலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment