ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் இரகசியான முறையில் இப்பிரேரணைக்கு ஆதரவு
வழங்குமாறு தெரிவித்து கையொப்பங்களை திரட்டி வருவதாக கொழும்பு ஊடகமொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 பேருக்கு மேல் கையொப்பமிட்டு யோசனை முன்வைக்கப்பட்டால் அதனை சபாநாயகரினால் நிராகரிக்க முடியாது என கையொப்பங்களை திரட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே நேரடியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரே இவ்வாறு கையொப்பங்களை திரட்டி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

0 comments:
Post a Comment