• Latest News

    September 18, 2019

    பயங்கரவாதியின் தலையை கொழும்பு கனத்தை மாயானத்தில் புதைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு

    கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என்ற பயங்கரவாதியின் தலையை கொழும்பு கனத்தை மாயானத்தில் புதைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
    திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
    இந்த பயங்கரவாதி தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.இந்த தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவிய அகமது அர்சாத் என்பவரை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பயங்கரவாதியின் தலையை கொழும்பு கனத்தை மாயானத்தில் புதைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top