(எம்.எம்.ஜபீர்)
எமது நாட்டின் முஸ்லிம் சமூகத்தின்
தேசியத் தலைவர் என்று பேசக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 20ஆவது திருத்த சட்டம் முற்றுமுழுதாக
சிறுபான்மை சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதி 20ஆவது திருத்த
சட்டத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தியதன் விளைவாகவே
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தினை கலைக்க வேண்டிய
நிலைப்பாட்டிற்கு இட்டுச்சென்றுள்ளதாகவும், இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அரசியல் முதிர்ச்சியே
காரணம் என முஸ்லிம் சமூகமும் மற்றும் சிறுபான்மை சமூகமும் பாராட்டுவதாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது
திருத்தச்சட்டத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றம் கலைக்கப்படாது எனவும் புதிய
முறையில் தொகுதி வரியாக தேர்தல்கள் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளர்
ராஜித சேனரத்ன அதிகமான ஊடகவியளாளர் மாநாட்டில் குறிப்பிட்டு இருந்தார்
அவர் தெரிவித்த கருத்திற்கு சிறுபான்மை சமூகத்தின் பாதிப்பை கருத்தில்
கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தினையும் ஏனைய கட்சிகளுக்கு
நிருபித்துக்காட்டிய எமது தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின்
சாணக்கியத்தை மேலும் பாரட்டுவதாகவும் ஐ.எல்.எம்.மாஹிர் மேலும்
0 comments:
Post a Comment