• Latest News

    June 28, 2015

    தமிழ் முஸ்லீம் மக்கள் விரிக்கப்பட்ட சதிவலையிலிருந்தும் அதாள பாதாளத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்: மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

    அபூ - இன்ஷாப்:
    அரசு 20வது சீர்திருத்தம் என்ற போர்வையில் இந்த நாட்டிலே வாழ்கின்ற சிறுபான்மை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு விரிக்கப்பட்ட சதிவலையிலிருந்தும் அதாள பாதாளத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நேற்று (27) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

    அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷhத் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் 20வது சீர்திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு ஆபாத்தானதும் ஆநீதியானதும் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவர் அப்துல் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அதனை எதிர்த்தார்கள் அதனை இறைவன் அங்கிகரித்ததன் விளைவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

    கடந்த முதலமைச்சரிடம் இன்று வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பாகவும் நியமனங்களை பெற இருப்பவர்களின் வயது மற்றும் அவர்கள் 10-20 வருடங்கள் செய்த பணி அர்த்தமற்றதாகிப்போய் விடும் என்று மண்டியிட்டும் அது செய்யமுடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தன.

    நல்லாட்சியின் பின்னர் எமது ஜனாதிபதி அவர்களின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணியாற்றியவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்ற உத்தரவுக்கு அமைவாக எமது முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களும் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களும் எடுத்துக்கொண்ட துரித முயற்சியும் அதற்கு பக்கபலமாக செயற்பட்ட மாகாணசபைஉறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களினதும் செயற்பாடு இந்த நியமனத்துக்கு அளப்பரிய பங்களிப்ப செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

    உரிமைமறுக்கப்பட்ட சமூகத்துக்கு கிடைத்த ஒரு உரிமையாகவே நான் இந்த நியமனத்தை பாhக்கின்றேன் நீங்கள் எமது சமூக ஒற்றுமைக்கு பங்களிப்புச் செய்வீர்கள் எனவும் நான் எதிபாhக்கின்றேன்.

    ஜனாதிபதி மாற்றத்துக்காhன போராட்டத்தில் எமது சிறுபான்மை முஸ்லீம்களை ஓர் அணியில் திரட்டிய பெருமை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவத்தையும் அக்கட்சியினையுமே சாரும்.

    எமக்குள் நாம் பாகுபாடின்றி செயற்பட வேண்டும் படுகுழியிலிருந்து எமது முஸ்லீம் சமூகத்தை பாதுகாத்த எமது தலைமைத்துவத்தின் கரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் ஆரிப் சம்சுதீன் கேட்டுக் கொண்டார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழ் முஸ்லீம் மக்கள் விரிக்கப்பட்ட சதிவலையிலிருந்தும் அதாள பாதாளத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்: மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top