இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பில் இன்று (22) பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக, அதன் ஊழியர்களின் பாரிய போராட்டம் முன்னெடுத்தனர். இதன்போது உத்தேச மின்சார சபைத் திருத்தச் சட்டத்தைக் கைவிடுமாறும் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அரசாங்கமும் மின்சார சபையும் தமது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதுடன், தொழிலாளர்களுக்குரிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிடையே மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
0 comments:
Post a Comment