• Latest News

    February 10, 2016

    கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: ரணில்

    கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
    நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
    கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர் தெரிவித்துள்ளார்.
    பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும் சுயாதீனமானதுமான முறையில் நடத்தப்படுகின்றது. 
    ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவில்லை.
    எவ்வாறெனினும் முழு அளவில் விசாரணைகளை நடாத்த போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு கிடையாது: ரணில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top