• Latest News

    February 09, 2016

    பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

    ஜனாநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

    இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

    காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் எம்.கே.டி.ஏ.எஸ் குணவர்தனவின் மறைவின் பின்னர் ஏற்பட்ட பதவி வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவு  செய்யப்பட்டிருந்தார்.

    இதே வேளை, தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு சரத் பொன்சேகா ரணிலி விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top