• Latest News

    July 11, 2016

    கல்முனை நகர அபிவிருத்திக்கு ரூபா 500மில்லியன் நிதி ஒதுக்கீடு

    யூ. கே. காலித்தீன், அஸ்லம் மெளலான-
    கல்முனை அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட கலந்துறையாடல் இன்று கல்முனை மாநக சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்றது
    இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

    இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பிரதி அமைச்சர் கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் நீண்ட காலத்தின் பின்னரே அடுத்த தேர்தல் நடைபெறும் ஆனால் அந்த கால இடைவெளியில் நாம் கல்முனை மாநகரத்தை எவ்வாறு கையாளுவது தொடர்பாகவும் குறிப்பாக கழிவகற்றல் முகாமைத்துவத்தை சரியான முறையில் கையாளப்படல் வேண்டும். இன்னும் மூன்று நாட்களுக்குள் இது தொடர்பான அறிக்கையினை தனக்கு தரும்படி ஆணையாளரிடம் கோரினார்.
    தொடர்ந்து கருத்துக் கூரிய அமைச்சர் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் அதில் வருகின்ற பிரச்சினைகளுக்கு தான் முகம்கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.  அதுமாத்திரமல்லாது நகர அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள 500மில்லியன் ரூபாவினை நகரத்தை எவ்வாறு அழகு படுத்தலாம், அபிவிருத்தி செய்யலாம் என்றும் மூன்று மாததிற்குள் நகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபையிலுள்ள பொறியியளாலர் பிரிவினை பயன்படுத்தி இவ் அபிவிருத்தியினை செய்வதா அல்லது அதற்கென பிரத்தியோகமாக திட்டமிடல் அலுவலகம் ஒன்றினை உருவாக்கி செய்வது எனவும் தீர்மானம் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கடந்த கால அனுபவங்களை வைத்து இம் மாநகர சபயை அபிவிருத்தி செய்யலாம் அதற்காகவேண்டி மாநகர முதல்வரையோ அல்லது நிருவாகிகளையோ குற்றம் காணவரவில்லை. எது எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்து கல்முனையை அபிவிருத்தி செய்வோம்.
    இன்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், முன்னால் மாநகர உறுப்பினர்கள், கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் கனி மற்றும் கல்முனை மாநகரத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை நகர அபிவிருத்திக்கு ரூபா 500மில்லியன் நிதி ஒதுக்கீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top