• Latest News

    July 26, 2016

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் 8 மணி நேரத்திற்கு மூடப்படும்

    கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி முதல்  8 மணி நேரத்திற்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.

    இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

    விமான ஓடுபாதையின் திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாலேயே இவ்வாறு அதனை மூட நேரிடுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

    மூன்று மாதங்களுக்கு இடம்பெறும் குறித்த பணிகள் காரணமாக, மு.ப 8.30 முதல் பி.ப 04.30 மணி வரையான 08 மணித்தியாலங்களுக்கு, இவ்வாறு விமான நிலையம் மூடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் 8 மணி நேரத்திற்கு மூடப்படும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top