• Latest News

    September 27, 2016

    வலயக் கல்விப் பணிப்பளரும், மாகாண சபை உறுப்பினரும் மோதல்

    கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ சுபைர் ஹாஜி அவர்கள் நேற்று வாழைச்சேனை பாடசாலை ஒன்றுக்கு தளர்பாட கையளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள ,அப்பாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தார் என்றும் ,
    நிகழ்வு முடிவடைந்து வெளியாகும்போது அப்பாடசாலையின் கலைபிரிவு உயர்வகுப்பு மாணவிகள் இடைமறித்து ," எங்களுக்கு அரசியல் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரை ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்மாற்றி விட்டதனால் ,அப்பாடத்துக்கு ஆசிரியர் இல்லாமல் ஒருமாதமாக அலைகிறோம் ,தயவுசெய்து எங்களது கோரிக்கையை ஏற்று அரசியல் பாட ஆசிரியர் ஒருவரை பெற்றுத் தாருங்கள் என்று கேட்டதாகவும்,
    இதுவிடயமாக மாகான கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,தனக்கு இவ்விடயம் தெரியப்படுத்தபடவில்லை எனஅவர் கூறியதும்,
    ஏறாவூர் திரும்பிய இவர் உடனடியாக வலயக்கல்விப் கல்விப்பணிமனை சென்று ,அல்ஹாஜ் சேஹு அலி சேரை நேரடியாக சந்தித்து மேற்படி விடயமாக கேள்வி எழுப்பியதும்,,
    ஏறாவூரில் மாக்கான்மாக்கார் மகாவித்தியாலய பிரச்சனை பார்க்கதெரியாமலா ,வாழைச்சேனை பிரச்சனை பார்க்கப் போனிங்க ?? என்று காரசாரமான தொனியில் பேசியதால் ,பதிலுக்கு இவரும் காரசாரமாக கதைத்த போது ,"ஐசே கெட் அவுட் " என்று வலயக் கல்விப்பணிப்பாளர் கூறியதும்,
    மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த விடயத்தை கேட்டதற்கு ,பணிப்பாளர் இவ்வாறு நடந்து கொண்டதால்
    கோபத்துடன் வெளியேறிய மாகாண சபை உறுப்பினர் வெளியில் வந்து காரசாரமாக பேசி ,மூன்று மாதத்துக்கு மேல் ,வலயக்கல்விப் பணிப்பாளராக இருக்க விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றதாக தகவல்.
    சம்பவம் நடைபெற்று சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு பிறகு மற்றைய தரப்பு அரசியல் அழுத்தம் காரணமாக ஏறாவூர் பொலிசில் சேஹு அலி சேர் ,சுபைர் ஹாஜிக்கு எதிராக முறைப்பாடு செய்து இன்று காலை விசாரணைக்காக இருவரும் பொலிசுக்கு அழைக்கபட்டு இணக்கப்பாட்டுக்கு வராததால் தற்போது மட்டக்களப்பு நீதிமன்றில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
    வலயக்கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் பதாகை ஏந்தி சுபைர் ஹாஜிக்கு எதிராக நிற்பதையும் ,இருவருக்கும் எதிராக சுவரொட்டிகள் ஓட்டப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
    இன்னும் என்னவாகுமோ??!! பொறுமையுடன் அவதானிப்போம்.

    இன்று காலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நடந்த சமரச முயற்சியின் போது வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் அலுவலகத்திற்கு வந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென கேட்டார். அதனை ஏற்க முடியாதென்றும் மாணவர்களின் கல்வி பிரச்சினை சம்பந்தமாக பேச சென்ற என்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை பகிரங்க மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சுபைர் ஹாஜியார் சொன்னதையடுத்து
    இருவரது முறைப்பாடு களும் மட்டக்களப்பு நீதிமன்றம் சென்றது. அங்கு நீதிமன்ற விசாரணையின் பின்னர் ஜனவரி 25 ஆம் திகதி இணக்க சபையில் சமூகமளிக்க பணித்ததுடன் இருவரும் 50000/= சரீர பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வலயக் கல்விப் பணிப்பளரும், மாகாண சபை உறுப்பினரும் மோதல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top