அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு
அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் தலைவர் எம்.எஸ்.எம்.ஹனீபா தலைமையில் 2025.10.25ஆம் திகதி இன்று காலை 10 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவானது சிரேஷ்ட ஊடகவியாலளர் இர்ஷாத் ஏ. காதர் தலைமையில் இடம்பெற்றது.
தலைவராக சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன், செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக எம்.எஸ்.எம். அப்துல் மலீக், உப செயலாளராக வி. சுஜிதகுமார், பிரதித் தலைவர்களாக எம். சஹாப்தீன், ஏ.எல்.ஏ. நிப்றாஸ், தவிசாளராக எம்.எஸ்.எம். ஹனிபா, அமைப்பாளராக யூ.எல். றியாஸ், கணக்கு பரிசோதகராக எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக சபை உறுப்பினர்களாக ஏ.வி.எம். அஸ்ஹர், எம்.ஏ.ஆர்.எம்.முஸ்தபா, அஸ்லம் எஸ். மௌலான, எல். கஜரூபன், ஐ.ஹுசைனுத்தீன், எம்.ஐ.எம். நவாஸ், என்.எம்.எம். புவாத், ஏ.எஸ்.எம். அஸ்மீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்







.jpeg)


0 comments:
Post a Comment