• Latest News

    October 04, 2016

    கல்முனை ஸாஹிராவில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய முக்கோண கிறிக்கட் சம்பியன்சிப் போட்டியில்

    சிம் பீச் றிசோட்  சம்பியன் கிண்ணத்தை றிக்னோ டைக்கஸ் ( TRIGNO TIGERS)  அணி சுவீகரித்தது.
    ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
    சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி சிம் பீச் றிசோட்  அனுசரணையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உயர்தர விஞ்ஞானப் பிரிவு அதன் பகுதித் தலைவர் எம்.எம்.ஏ. சமட் தலைமையில்  ,பிரதி பகுதித் தலைவர் ஏ.எம்.எம்.ஹக்கீம் உள்ளிட்ட உயர்தர விஞ்ஞானப்பிரிவு ஆசிரியர்களின் பங்களிப்புடன்  கணித மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்கள் பங்கேற்ற சிம் பீச் றிசோட்  சம்பியன் கிண்ண முக்கோண கிறிக்கட் தொடர் இன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

    கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் , உதவி அதிபர்களான எம்.எச்.எம்.அபுபக்கர், எம்.ஏ.சலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் அனுசரணையாளரும் சிம் பீச் றிசோட் முகாமைத்துவ பணிப்பாளருமான  ஏ. அல் – அமீன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

    உயர்தர விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த வெட்ஜ் வரியேர்ஸ்  ( WEDGE WARRIORS) , பயோ பிளாஸ்டர்  ( BIO BLASTERS),  றிக்னோ டைக்கஸ்  ( TRIGNO TIGERS) ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண கிறிக்கட் போட்டியின் முதற் போட்டியில் பயோ பிளாஸ்டர்  அணியும் றிக்னோ டைக்கஸ் அணியும் ஈடுபட்டன.

    முதலில் துடுப்பெடுத்தாடிய பயோ பிளாஸ்டர்  அணி 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றிக்னோ டைக்கஸ் அணி  7.4 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

    இறுதிப் போட்டியில் வெட்ஜ் வரியேர்ஸ் அணியும் றிக்னோ டைக்கஸ் அணியும் மோதிக் கொண்டன.

    முதலில் துடுப்பெடுத்தாடிய றிக்னோ டைக்கஸ் அணி 8 ஒவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  வெட்ஜ் வரியேர்ஸ் அணி 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.இப் .போட்டியில் றிக்னோ டைக்கஸ் அணி 17 ஓட்டங்களினால் வெற்றியிட்டி சிம் பீச் றிசோட்  சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

    இச்சுற்றுத் தொடரில் சிறப்பாட்டக்காரராக றிக்னோ டைக்கஸ் அணி வீரர் எம்.எம்.சஜாத் மற்றம் சிறந்த பந்து வீச்சாளராக வெட்ஜ் வரியேர்ஸ் அணி வீரர் எம்.எம்.றிகாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிராவில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டிய முக்கோண கிறிக்கட் சம்பியன்சிப் போட்டியில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top