• Latest News

    November 03, 2016

    டிசம்பருக்குப் பின் வாட்ஸ்அப் இல்லை

    டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் சில வகை கையடக்க தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை கிடைக்காது என வாட்ஸ்அப் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    எந்த வகையான தொலைபேசிகளுக்கு வாட்ஸ்அப் சேவை தடையாகப்போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
    சிம்பியான் ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட தொலைபேசிகள்
    பிளாக்பெர்ரி ஓ எஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
    நோக்கியா எஸ் 40
    நோக்கியா எஸ் 60
    ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2
    வின்டோஸ் போன் 7.1
    ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ், ஐஓஎஸ் 6 ஆகிய தொலைபேசிகளில் தான் வாட்ஸ்அப் சேவை டிசம்பர் 31க்கு பிறகு கிடைக்காது.
    வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் தொடர்பாக அந்த நிறுவனம்,
    "இந்த வகை தொலைபேசிகள் எங்களுக்கு முக்கியம் என்றாலும், எதிர்கால சேவைக்கு இந்த வகை தொலைபேசிகளில் தொழில்நுட்ப வசதி இல்லை.
    அதனால் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி உள்ளது. எனவே, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள வேறு தொலைபேசியை மாற்றிவிடுங்கள்.
    அப்போதுதான் இந்த சேவையை தொடர்ந்து பெற முடியும்" என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிசம்பருக்குப் பின் வாட்ஸ்அப் இல்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top