இன்று அம்பாரை கச்சோியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் அமைச்சர் தயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் ஆகேியோர்களின் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களான பிரதி அமைச்சர் பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உட்பட அம்பாரை மாவட்டத்தில் உள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
இதன்போது பல விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பற்றியும் பேசப்பட்டுள்ளன. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் புத்தர் சிலை வைப்பதற்கு நான் அனுமதி வழங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என தம்மீது ஏற்பட்டுள்ள கலங்கத்தை அகற்றுவதற்கு முனைந்துள்ளார். (இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இனி அதனை எந்த ராசாவாலும் நீக்க முடியாதென்று சொன்னதாக வீடியோக்கள் உலாவுகின்றது. இதற்கு என்ன சொல்வாரோ)
அமைச்சர் தயாகமக்கே கருத்துத் தொிவிக்கையில், புத்தர் சிலையை எனது ஆதரவாளர்கள்தான் என்னுடைய ஆதரவுடன் வைத்துள்ளதாக கதை கட்டியுள்ளார்கள். இதற்கு நான் துணை போகவில்லை. இப்போது சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனை இனி நீக்க முடியாது. அப்படி நீக்க முற்பட்டால் நான் எனது பதவிகைளை இராஜினாமாச் செய்வேன் என்று சூளுரைத்துள்ளார்.
இதன் போது அங்கு இருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் யாரும் வாய்திறக்கவில்லை. மேடையில் கத்துவார்கள். தொலைக்காட்சியில் ஒப்பாாி வைப்பார்கள். ஊடகங்களில் ஊலையிடுவார்கள். ஆனால், கதைக்க வேண்டிய இடத்தில் கதைக்கமாட்டார்கள். அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும், பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும் கதைக்க வேண்டியதை கதைக்காதிருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் தேவைதானா?
இதற்குள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தவமும், உதுமாலெப்பையும் அக்கரைப்பற்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி வேலை பற்றி சண்டையிட்டுள்ளார்கள். சமூகப் பிரச்சிரனக்கு குரல் கொடுக்கவக்கற்றவர்கள் ஊர்ச் சண்டையில் ஈடுபடுகின்றார்கள்.
தவம் பொத்துவிலுக்கு தனியான வலயக் கல்வி அலுவலகம் வேண்டுமென்று தொிவித்துள்ளார். மாகாண சபையில் கதைத்து சாதிக்க வேண்டியதை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கதைப்பது. நானும் பொத்துவில் பற்றாளன் என்று காட்டுவதற்கா?
பொத்துவில் பற்றியும் பேசுங்கள், அபிவிருத்தி பற்றியும் பேசுங்கள். ஆனால், சமூகத்திற்கு தீங்காக அமையயுள்ள புத்தர் சிலை வைப்பு ஆக்கிரமிப்பு பற்றியும் பேச வேண்டும்.
இதே வேளை, இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிச்சயமாக புத்தர் சிலை வைக்கப்பட்டது பற்றியும் பேசப்படுமென்று தொிந்திருந்தும் பிரதி அமைச்சர் இருவரும் கலந்து கொள்ளாமை எதற்காக? இதனை அப்படி என்ன சமூகப் பணி இருக்கப் போகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி இப்படியே சென்றால் மாயக்கல்லி மலைக்கு அப்பாலும் சிலைகள் வரும். ஒருவர் வைக்கச் சொன்னார் என்பார். உாியவர் அப்படி நான் சொல்லவில்லை என்பார். வைத்ததை எடுக்க முடியாது என்று சண்டித்தனம் பண்ணுவார். மற்றவர்கள் அடங்கி, ஒடுங்கி சொல் இழந்து வாய் காய்ந்து நிற்பார்கள். முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்குமென்று சொல்வது எப்படி?
0 comments:
Post a Comment