-Siddeque Kariyapper-
ஐ அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் அரசியல் நிகழ்ச்சியில் அதாவுல்லாஹ் கூறியவற்றின் ஒரு பகுதி)
” இன்னொரு முக்கிய விடயம். இதனுடன் தொடர்புடையது. உங்களுக்காகத்தான்
கூறுகிறேன். இறக்காமத்தில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது பேசி கதைத்து
நடக்கலாம் என வையுங்கள். அது வேறு விஷயம்….அம்பாறை ஜீ.ஏ. அங்குள்ள
ஹாமதுருமார், முக்கியமான பொலிஸ் ஓ.ஐ.ஸி. ஆமி எல்லோரையும் கூப்பிட்டு
பேசியுள்ளார். மன்சூர் மினிஸ்டரும் போய் இருக்கிறார்”....
நிகழ்ச்சி நடத்துனர் யூ.எல். யாக்கூப்:- மன்சூர் எம்.பி.
அதாவுல்லாஹ்:- டிப்பியூட்டி மினிஸ்டரே..
நிகழ்ச்சி நடத்துனர் யூ.எல். யாக்கூப்:– இல்லை சம்மாந்துறை பராளுமன்ற உறுப்பினர்
அதாவுல்லாஹ்:- ஓ..எம்.பி…. பிறகு இன்னும் பலர் போயிருக்கிறார்கள். எங்களது
உதுமாலெவ்வை. மாகாண சபை உறுப்பினர் போயிருக்கிறார். அப்ப ஜீ ஏ. ஸ்டாட்
பண்ணக்க சொல்லியிருக்கிறார் நாங்க சிலை வைக்கிறதுக்கு முந்தி மன்சூர்
எம்பிக்கிட்ட அனுமதி கேட்டோம். அவர்தான் டி.டி.சீ கோ சேர்மன். நாங்கள்
வைச்சிருக்கிறோம் என அவர் பேசியிருக்கிறார்.
நிகழ்ச்சி நடத்துனர் யூ.எல். யாக்கூப்:- மன்சூர் எம்பி எம்பியின்
அனுமதியுடன்தான் சிலை வைக்கப்பட்டுள்ளது? (அஸாத் சாலியும் அதாவுல்லாஹ்வும்
சிரிக்கின்றனர்)
அதாவுல்லாஹ்:- முழுப்பள்ளிவாசல், இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை மக்கள்
எல்லாம் இதப் பார்தது வெலவெழுத்துப் போய் வேர்த்து போய்
இருந்திருக்கிறாங்க.
அடுத்த அன்று நடந்த டி.ஸி.ஸியில இந்த விஷயத்தை மன்சூருக்கிட்ட
கேட்டிருக்காங்க… அவர் சொல்லியிருக்காரு இது பௌத்த நாடு. அவங்க வேண்டிய
இடத்தையெல்லாம் வைக்கலாம். அத நாம ஆரும் தடை செய்ய இயலா என்று
சொல்லியிருக்காரு. இப்ப என்ன பிரச்சினை என்றா அது அவருட கருத்து அது சரி.
அப்ப ஏன் நீங்க இந்தப் பத்திரிகைகளுக்கு மட்டும் அறிக்கை
விடுறீங்க..(சிரிப்பு)
நிகழ்ச்சி நடத்துனர் யூ.எல். யாக்கூப்:- ரபூப் ஹக்கீம் அந்த இடத்துக்குப் போனாரு.
அதாவுல்லாஹ்:- அந்த இடத்துக்குப் போய் அங்க யாரு இருக்கப்
போறாங்க..மாணிக்கமடுல கொஞ்சம் ஆட்கள் இருக்கிறாங்க.. ஆனா மொத்தமாக முஸ்லிம்
மெஜோரட்டி பிரதேச சபா.
அந்த ஆட்களுக்கிட்ட போய் அதுவும் வேற வேலையா கல்முனைக்கோ எங்கேயோ போனவர்
அவடத்த டக்கின போய் வேறு யாரும் போய் நியூஸ் வந்திருமே பேர்பர்கள,
பேஸ்புக்ல என்று அவர் ஓடிப் போய் எல்லாம் வழக்குப் போட்டிருக்கு.. எல்லாம்
சரி வரும் என்று சொல்லிப் போட்டு வந்திருக்கார்.
இப்ப கேள்வி என்னவென்றால். இதே விஷயத்தை சிங்களத்திலயும் பேசுங்களேன்.. இதே
விஷயத்த ஆங்கிலத்தில பேசுங்கோ தமிழ பேப்பருக்கு மட்டும் ஏன்
கொடுக்கிறீங்க? ஏன் மக்களை ஏமாத்துகிறீர்கள்.ஆகவே நீங்கள் என்ன
சொல்கிறீர்களோ அத அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் போகனும்.
0 comments:
Post a Comment