• Latest News

    November 11, 2016

    புத்தர் சிலைகளும் சிறுபான்மையினரின் எதிர்காலமும்

    இலங்கை நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகின்றார்கள் என்ற விடயம் அனைவரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆதலால் இதனை மீண்டும் அழுத்தமாக சொல்லவேண்டிய தேவையில்லை.

    கடந்த சில ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதக்குழுக்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து தமது தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இலங்கை சிங்களவர்களின் நாடு என அழுத்திச் சொல்லும் அதேவேளை முஸ்லிம்களை இந்நாட்டைவிட்டு துரத்துவோம் அல்லது அழித்தொழிப்போம் எனவும் துவச வார்த்தைகளைக் கொண்டு காயப்படுத்தி வருகின்றார்கள்.

    உண்மையில் இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. இது சிங்களவர்கள்இ தமிழர்கள்இ முஸ்லிம்கள்இ கிறிஸ்தவர்கள்இ இந்தியத் தமிழர்கள்இ மலேஇ பேகர் மற்றும் ஏனைய மதத்தவர்கள் என பல்லினம் வாழும் ஒரு நாடாகும். இப்பல்லினத்தவர்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதே உண்மையாக இருக்கின்றது.

    பௌத்தர்கள் பெரும்பான்மை என்பதால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இம்முதன்மைத் தானத்தின் பிரதிபலனாகவே தொடர்ந்தும் நாட்டை ஆளும் வாய்ப்பை சிங்களவர்கள் பெற்று வருகின்றார்கள்.

    முழு நாட்டிலும் பெரும்பான்மையாக பௌத்தர்கள் வாழ்ந்தாலும்இ வடக்குஇ கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினராகவே வாழ்ந்து வருகின்றார்கள். இதனாலேயே வடக்கிலும்இ கிழக்கிலும் பௌத்த மதத்தின் ஆதிக்கத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தத்திற்குப் பின்னரான காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் பௌத்த மதத்தின் ஆதித்தத்தை நிலைநிறுத்த புத்தர் சிலையை நிறுவி வருகின்றார்கள்.

    கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வழும் முக்கிய நகரங்களுள் ஒனறான திருகோணமலை நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் புத்தர் சிலையொன்று வைத்தபோது அதனை எதிர்த்து அங்கு வாழ்கின்ற தமிழ்-முஸ்லிம் மக்கள் வீதியிலிறங்கி தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பயனெதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டன.

    மட்டக்களப்பு மாவட்டத்தில்இ கல்லாற்றுப் பாலத்தருகில் காணப்படும் பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன்னால் எந்தவொரு பௌத்தர்களும் இல்லாத இடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

    ஓட்டமாவடி பிரந்துறைச்சேனை அல்-அஸ்கர் வித்தியாலத்தின் மைதானத்தில் திடீரென சிலையொன்று வைக்கப்பட்டு துறவியொருவர் அம்மைதானம் பௌத்தர்களுக்குரியது என உரிமையோரிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

    தொடர்ந்து வந்த பெளத்த சிலை வைக்கும் விவகாரம் அம்பாறை மாவட்டத்தின் தெற்கெல்லையாக பொத்துவில் நகரை நோக்கிப் பயணித்தது. முஸ்லிம்களின் பூர்வீகமாக வாழ்ந்து வரும் மணல் மலையில் திடீரென பொலிஸ் பாதுகாப்பில் சிலையொன்று வைக்கப்பட்டது. இச்செயலினால் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்துக்குள்ளாக்கியது. மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தினை தடுக்க அரசியல் ரீதியில் பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் அரச தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மூதூர் பிரதேசத்திலுள்ள  ஜபல் மலையில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது. சிலையோடு சேர்த்தாற்போல் விகாரையும் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செயற்பாட்டினை பிரதேச மக்கள் எதிர்த்தார்கள். எதிர்ப்பிலிருந்து புத்தர் சிலையை பாதுகாக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

    இன்னும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பூர்வீக நாகரங்களில் ஒன்றான அக்கரைப்பற்று நகரமத்தில் காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியில் பௌத்த விகாரை வடிவிலான தோற்றமொன்று புதிதாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும்இ எதிர்காலத்தில் அக்கோபுரத்தில் எதிர்காலங்களில் சிலை வைக்கப்படலாம் எனவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

    தற்காலத்தில் இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் பௌத்த சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்-முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழும் குறித்த பிரதேசத்தில் திடீரென பௌத்த துறவிகளால் வைக்கப்பட்டுள்ள சிலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

    இறக்காமத்தில் புத்தர் சிலை வைத்தது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையிலும்இ பாராளுமன்றத்தில் அமைச்சர் மனோ கணேஷனும் இணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். பிரதமர் ரணில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வாரகால அவகாசம் கேட்டுள்ளார்.

    இவைபோக கிண்ணியா துறையடியில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டிடவேலைகள் துரிதமாக அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளிவந்ததை அடுத்து அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அச்சத்திலுள்ளார்கள்.

    கடந்த 2016.11.07ம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்ப்படவேண்டும் என எழுப்பப்பட்ட கருத்திற்கு அமைச்சர் தயாகமகே அச்சிலையை அகற்றினால் தான் பதவியைத் துறப்பதாகவும்இ எங்கெங்கு சிலைகள் வைக்கப்படுகின்றன  என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற ஒருபோதும் இடமளிக்கமுடியாது என்றும் தெரிவித்தது மட்டுமல்லாதுஇ பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையிலான 12000 ஏக்கர் காணிகள் தீகவாபி விகாரைக்குச் சொந்தமானவை எனவும் ஆதாரமில்லாத கருத்தையும் தெரிவித்துள்ளார்.

    இவரின் இக்கருத்தானது சிறுபான்மையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அவரின் கருத்திலிருந்து எதிர்காலத்தில் சில குடும்பங்கள் மட்டுமே வாழும் கல்முனையிலும் புத்தர் சிலை வைக்கப்படலாம் என்பது தெளிவாகிறது.

    சிறுபான்மையினர் பூர்வீகமாக வாழ்ந்துவரும் நகரங்களில் பௌத்த மதத்தின் அடையாளச் சின்னமான புத்தர் சிலையை நிறுவி தமது பெரும்பாண்மையை நிரூபிக்க முயலும் செயற்பாடானது ஆரோக்கியமான ஒன்றல்ல. இது சிறுபாண்மையினரின் பூர்வீகம் பறிபோவதற்கும்இ மதச் சுதந்திரத்திற்கும் பாதகமாக அமைவதோடு நின்றுவிடாமல் பெரும்பான்மையினரின் குடியேற்றத்திற்கும் வழிவகுக்கும் என மக்கள் அச்சம் கொள்கின்றார்கள்.

    சிலைவைப்பு விவகாரத்தினை சில அரசியல்வாதிகள் சமூகப்பிரச்சினையாகக் கருதாது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சனம் செய்து அரசியாக்க முயற்சிப்பது அவர்களின் சமூகப் பற்றின்மையும் மடமையையும் வெளிப்படுத்துகின்றது. மாறாக தொடர்ச்சியாக பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் வைக்கப்படும் புத்தர் சிலைகள் அநாதையாக்கப்பட்டதை தவிர அவை அகற்றப்பட்ட வரலாறே இல்லை என்பதே உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    இலங்கை சனநாயக சோசலிக குடியரசின் அரசியலமைப்பு நாட்டிலுள்ள மதங்களுக்காக சுதந்திரம் பற்றியும் பௌத்த மதம் பற்றியும் இவ்வாறு சொல்கிறது.
    அத்தியாயம் ஐஐ பௌத்தமதம்: உறுப்புரை 9. இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத்தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடுஇ அதற்கிணங்க 10ஆம்இ 14(1) (உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதே வேளையில்இ பௌத்த சாசனத்தை பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

    அத்தியாயம் ஐஐஐ அடிப்படை உரிமைகள்:
    உறுப்புரை 10. ஆளொவ்வொருவரும் தாம் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருத்தற்கான அல்லது மேற்கொள்ளுதற்கான சுதந்திரமுற்பட சிந்தனை செய்யும் சுதந்திரம்இ மனச் சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம்இ மதச் சுதந்திரம்  என்பவற்றிக்கு உரித்துடையவராதல் வேண்டும்.

    உறுப்புரை 14 (1) (உ). தனியாக அல்லது மற்றவர்களுடன் சேர்ந்துஇ பகிரங்கமாகவேனும்இ அந்தரங்கமாகவேனும் தனது மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ வழிபாட்டிலும்இ அனுசரிப்பிலும்இ சாதனையிலும் போதனையிலும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரம்:
    என சுட்டிக் காட்டுகின்றது.

    எனவேஇ சிறுபாண்மையினர் பூர்வீகமாக பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பிரதேசங்களில் பெரும்பான்மையினர் அத்துமீறி பலவந்தமாக வைக்கப்படும் புத்தர் சிலைகள் தொடர்பாக சிறுபான்மைச் சமூகம் மிக நிதானமாகவும் அவதானமாகவும் செயற்படவேண்டியுள்ளது. குறிப்பாக கிழக்கிற்கு வெளியே வைக்கப்படும் எந்தச் சிலைகளையும் பெரும்பான்மையினர் பெரிதுபடுத்துவதில்லை. சிறுபான்மையினரும் அதனை கண்டுகொள்வதுமில்லை. ஆனால் அம்பாறையில் சிலைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்புக்கள் சிறுபான்மையினர் சமூகத்திற்கு பேரிடியாக அமைந்துவிடாமல் பொறுப்புவாய்ந்தவர்கள் நடந்து கொள்ளவேண்டும்.

    ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்
    கல்முனை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: புத்தர் சிலைகளும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top