இலங்கைப் பெண்களை இந்தியாவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி அம்பலமாகி உள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமாக விசா பெற்று டுபாய் செல்ல முயற்சித்த 6 பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு
கைது செய்யப்பட்ட பெண்கள் நுவரெலியா, மூதூர், செங்கலடி, இப்பாகமுவ,
மற்றும் தங்கொடுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்திய
அரசாங்கத்தால் வெளியிடப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் இலங்கைப்
பெண்களின் தகவல்களை இணைத்து குறித்த மோசடி மேற்கொள்ளப்படுகின்றது.
பின்னர்
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை மிகவும் திறமையான
முறையில் தவிர்த்து, இலங்கைப் பெண்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி வந்த மோசடி
நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும்,
இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment