• Latest News

    December 03, 2016

    செயலாளர் விடயத்தில் சறுக்கிய சாணக்கியம்.

    செயலாளர் யார் என்பதை கட்சியின் உயர்பீடத்தை கூட்டி முடிவெடுத்து எதிர்வரும் டிசம்பர் 15க்கு முதல் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளார்.
    கட்சிக்கு செயலாளர் நாயகம் என்று ஒருவரும், செயலாளர் என்று ஒருவரும் இருப்பதால் குழப்பம் காணப்படுவதாகவும்,
    தேர்தல் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எனும் இடத்தில் தனது பெயருக்கு பதிலாக மன்சூர் ஏ காதரின் பெயர் மாற்றீடு செய்யப்பட்டமைக்கு எதிராக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி செய்துள்ள முறைப்பாட்டின் காரணமாகவும்,
    கடந்த பேராளர் மாநாட்டின் முடிவுகளை சட்டத்திற்கு முரணாக கட்சியின் செயலாளருக்கு பதிலாக கட்சியின் தலைவர் தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்தமையை ஹசனலி கேள்விக்குட்படுத்தியதனாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
    அதன்காரணமாகவே எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் கட்சியின் முடிவை அறிவிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    அவ்வாறு செயலாளர் யார் என்பதை அறிவிக்காவிட்டால் கட்சி எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    உயர்பீட அறிவாளிகள் என்ன தீர்மானிப்பார்களோ?
    அல்லது வழமைபோல் ரவூப் ஹக்கீம் ஹசனலியோடு டீல் ஏதும் பேசி பிரச்சினையை முடித்துவிடுவாரோ!
    பொறுத்திருந்து பார்ப்போம்.
    அபுல் ஹசன் அன்வர்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: செயலாளர் விடயத்தில் சறுக்கிய சாணக்கியம். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top