• Latest News

    December 05, 2016

    மு.காவின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் அதிருப்தி

    நமது நிருபர்-
    முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது 6ம் பிரிவுக்கான கிளைக்குழு புனர் நிர்மாணக் கூட்டம் நேற்று முன் தினம் (04) இரவு கிளைக்குழுவின் அமைப்பாளரும், குழுத் தலைவருமான எம்.ஹுசைன் முபாரக் தலைமையில் இடம்பெற்றது.
    சாய்ந்தமருது 6ம் பிரிவு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் சாய்ந்தமருது  முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ஏ. பஷீர் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தார்கள்.

    இங்கு உரையாற்றிய முபாரக், நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும்  முஸ்லிம்களுக்கு எதிரான செயட்பாடுகளின் போது நமக்கென்று ஒரு கட்சியின் தேவையும், அதனை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியதுடன், கட்சியால் வழங்கப்படும் தொழில் வாய்ப்புகளின் போதும், ஏனைய உதவிகளின் போது கிளைக் குழுக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.


    முன்னாள் பிரதிமுதல்வர்
     கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வர் பஷீர் உரையாற்றுகையில்,
    கிளைக் குழுக்களுக்கு மாத்திரமல்ல தங்களுக்கும் எதுவும் தெரியாத நிலையிலேயே தற்போதான கட்சியின் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  இந்நிலை நீடிக்குமானால் எதிர்காலத்தில் கட்சி செயற்பாடுகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாக அமையும்.

    சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற விவகாரத்தில் பல்வேறு விசமத்தனமான பிரச்சாரங்கள் சமூக வலைத்தளங்களூடாக தற்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பபவர்கள் மக்களை குழப்பி அதில் குளிர்காய முடியுமே அன்றி அவர்களால் வேறு எதனையும் அடைந்துகொள்ள முடியாது. முஸ்லிம்  காங்கிரஸ் இவ்விடயத்தில் உளச்சுத்தியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.  அதற்கு நான் சான்றுபகர்கின்றேன்.  எல்லை நிர்ணய விடயம் பூர்த்தியடைந்தவுடன் அதனை பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பபாகும்.

    மத்தியகுழுத் தலைவர்
     முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்தியகுழுத் தலைவரும், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான பிர்தௌஸ் உரையாற்றுகையில்,
    ஹுசைன் முபாரக் அவர்களது குற்றச்சாட்டானது முற்றிலும் நியாயமானது.  கிளைக் குழுக்கள் மாத்திரமல்ல அமைப்பாளர்களான நாங்களும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளளோம். மர்ஹூம் அஸ்ரப் அவர்களது காலத்தில் அமைப்பாளர்களாக செயல்பட்டவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டவன் என்ற வகையில் அமைப்பாளர்களின் அதிகாரங்களையும், அந்தஸ்துக்களையும் நன்கறிந்துள்ளேன்.

    அந்த வகையில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இன்று பெயரளவிலேயே தமக்கான அமைப்பாளர் பதவி காணப்படுவதாகவும், தம்மைப்போன்ற ஆரம்பகால போராளிகள் இன்று வாக்குச் சேகரிக்கும் இயந்திரங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அண்மைக் காலங்களில் கட்சியுடன் இணைந்து கொண்டவர்கள் அரியாசனங்களில் அமர்ந்துள்ள வரலாற்றையும் நீங்கள் அறிவீர்கள். 

    இந்த நிலை தொடர அனுமதிக்க முடியாது. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் சாய்ந்தமருதின் அனைத்து கிளைக் குழுக்களும் புனரமைப்பு செய்யப்பட்டு புதிய உத்வேகத்துடன் செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மு.காவின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்கள் அதிருப்தி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top