• Latest News

    December 22, 2017

    14 சபைகளில் ஏணி சின்னத்தில் தனித்து போட்டி – மனோகணேசன்

    மிழ் முற்போக்குக் கூட்டணியானது ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக 14 சபைகளுக்கு போட்டியிடுகின்றது.

    கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபை, இம்புல்பே பிரதேச சபை,கொடக்கவெல பிரதேச சபை ஆகியவற்றிலும், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை மாநகர சபை, மாத்தளை பிரதேச சபை, இறத்தோட்டை பிரதேச சபை ஆகியவற்றிலும், கண்டி மாவட்டத்தில் கண்டி மாநகர சபை, நாவலப்பிட்டிய நகர சபை, கம்பளை நகர சபை, பன்வில பிரதேசசபை, உடபலாத பிரதேச சபை, குண்டசாலை பிரதேச சபை, மெததும்பர பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றது என அதன் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 14 சபைகளில் ஏணி சின்னத்தில் தனித்து போட்டி – மனோகணேசன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top