• Latest News

    December 22, 2017

    போதைப்பொருட்களுடன் தப்பிச்செல்ல முயற்சித்த ஒருவர் கைது

    சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து இரகசியமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி குறித்த நபர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் கொட்டஹேன கல்பொத்த சுற்றுவட்டத்தில் சொகுசு வேண்
    ஒன்றுடன் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    குறித்த சம்பவத்தில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் இதனால் இரு பொலிஸ் அதிகாரிகள் சிறு காயங்களுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

    சந்தேக நபர் குறித்த போதைப்பொருட்களை அதிவேக நெடுஞ்சாலையினூடாக கம்பஹாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போதைப்பொருட்களுடன் தப்பிச்செல்ல முயற்சித்த ஒருவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top