• Latest News

    December 19, 2017

    குரங்கை மரத்தில் கட்டிவைத்து அடித்த விவசாயி கைது

    காராஷ்டிரா மாநிலத்தில் பயிர்களை சேதப்படுத்திய குரங்கை மரத்தில் கட்டிவைத்து பெல்ட்டால் அடித்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கிராம்குரா கிராமத்தில் பவான் பங்கர் என்ற விவசாயின் தோட்டத்தில் குரங்கு ஒன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் கோபமடைந்த விவசாயி அந்த குரங்கைப் பிடித்து மரத்தில் கட்டி தொங்கவிட்டு பெல்ட்டால் அடித்துள்ளார்.

    பின்னர் கம்பால் அதை கொடூரமாக தாக்கியுள்ளார். துன்புறுத்தலுக்கு ஆளான குரங்கு உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேர்ற்று வைரலனாதை அடுத்து அந்த விவாசாயி கைது செய்யப்பட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குரங்கை மரத்தில் கட்டிவைத்து அடித்த விவசாயி கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top