இலங்கைக்கு கடத்தப்பட்ட 25 லட்சம் பெறுமதியான போதைமாத்திரைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஒருவர் கடத்தி வந்துள்ள நிலையில், அவரை அழைத்துச்செல்ல வந்த மற்றைய நபரையும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் 62, 29 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

0 comments:
Post a Comment