• Latest News

    January 12, 2018

    “அடையாளம்” நூல் வெளியீட்டு விழா நாளை

    மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்றுச் சுருக்கம் அடங்கிய “அடையாளம்” நூல் வெளியீட்டு விழா ஜனவரி 13ஆம் திகதி சனிக்கிழமை (நாளைய தினம்) மாலை 3.30 மணிக்கு மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

    ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன், சிறப்பதிதியாக மாவனல்லை கல்வி வலயத்தின் பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ் நஜீப் (நளீமி) கலந்து கொள்ளவுள்ளார்.

    நூலின் முதல் பிரதியை சபுமல் நிறுவனத்தின் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான அல்-ஹாஜ் கமால்தீன் பெற்றுக்கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: “அடையாளம்” நூல் வெளியீட்டு விழா நாளை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top