- பா.திருஞானம் -
மக்களால் தெரிவு செய்யபட்டு பாராளுமன்றுக்கு அனுப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நடந்துக் கொண்ட விதத்தையும் அங்கு நடைபெற்ற அசம்பாவித்தையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். மக்களால் தெரிவு செய்யபட்டவர்கள் மக்கள் நலன் கருதி செய்யபட வேண்டும் என்று கூறினார்.
கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியன்தோட்டை பனாவத்த தோட்டம் போன்றவற்றில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடபெற்றது
இக் கூட்டங்களில் மலையக மககள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தழல் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் சஞ்சே பெரோ மலையக மககள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட ஆதரவாளர்கள் வேட்பாளர்கள் கலந்துக் கொண்டாரகள்
0 comments:
Post a Comment