பெருந்தோட்ட
பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்டிருந்த ஒரு சில பின்னடைவுகளை
தீர்த்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள
இரண்டு ஏக்கர் காணி பெரும் வரப்பிரசாதமாக அமையும் என மலையக மக்கள்
முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி
இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (12.04.2018) நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இதனை தொரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
பெருந்தோட்ட
மக்களின் பிள்ளைகளினது கல்வி செயற்பாடுகளுக்காக 843 பாடசாலைகள் இலங்கை
முழுவதும் இயங்கி வருகின்றது.இந்த பாடசாலைகளில் அநேகமான பாடசாலைகள்
பெருந்தோட்டங்கள் நிர்வகித்து வந்தன அவற்றை 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர்
கட்டம் கட்டமாக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு அவை தற்பொழுது
அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில்
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி வழங்க வேண்டும் என்ற
விடயம் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அது கடந்த காலங்களில்
நடைமுறைபடுத்தப்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டு நான் கல்வி
இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின்பு இதற்கான முன்னெடுப்புகளை
பலவேறு மட்டத்திலும் மேற்கொண்டிருந்தேன்.அதன் பயனாக அண்மையில் நடந்த
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியிருக்கின்றது.
இதனை
பெற்றுக் கொடுப்பதற்கு ஒத்தழைப்பு வழங்கிய அனைத்து அமைச்சர்களுக்கும்
மலையக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.இதற்காக
கல்வி அமைச்சு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அரசாங்க தொழில் முயற்சி
அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து அமைச்சரவை பத்திரத்தை தாக்கல்
செய்திருந்தது.
அந்த அமைச்சரவை தீர்மானத்தின்படி கீழ் வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
01
இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளில்¸ தற்போது அதிக
பட்சமாக 02 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பெருந்தோட்டப் பாடசாலைகளின்
அபிவிருத்தி நடவடிக்கைகள் அவ் 02 ஏக்கரினுள்ளே நடாத்;துவதற்கு¸ அக்காணி
உரிமையைக் கல்வி அமைச்சு சுவீகரித்து கொள்வதற்கும்
02 தற்போது 02
ஏக்கர் நிலப்பரப்பை விடக் குறைந்த நிலப்பரப்பைக் கொண்ட பெருந்தோட்டப்
பாடசாலைகளுக்காக அதிக பட்சமாக 02 ஏக்கராவதற்குத் தேவையான காணியைப் பெற்றுக்
கொடுக்கும் போது¸ அப்பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள குறைந்த விளைச்சலுடைய
(தேயிலைஃஇறப்பர்) காணிகளைத் தெரிவு செய்வதற்கும் முன்னுரிமை வழங்கி
முழுமையாக 02 ஏக்கர் காணியை கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்கும்.
03
மேற்குறித்த அனுமதி 01 மற்றும் 02இன் அடிப்படையில் காணி சுவீகரிப்பதற்கு
முன்னர் பிரதேச பெருந்தோட்டக் கம்பனிப் பணிப்பாளர் சபையின் அனுமதியுடன்
புழடனநn ளூயசந உரியத்தாகும் திறைசேரி செயலாளரின் அனுமதியை வழங்குதல்.
ஆகிய
தீர்மானங்கள் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி அருகில் உள்ள
பாடசாலை சிறந்த பாடசாலை எனும் கல்வி அமைச்சின் அபிவிருத்தி
வேலைத்திட்டத்தை மிகவும் விரைவாக முன்னெடுக்க முடியும் என
எதிர்பார்க்கின்றேன்.எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment