(றியாஸ் இஸ்மாயில்)
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான மக்கள் தொண்டன் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக நமது பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையினை சீரமைக்குமாறு புதிய தவிசாளரிடம் கேட்டுக்கொண்டதன் நிமிர்தம்....!!!
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமனுல்லா தலைமையில் இன்று மாலை பிரதேச சபை தவிசாளரின் மண்டபத்தில் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ம் திகதி முதல் தனி இறைச்சின் விலை900 ரூபாவில் இருந்து 800 ரூபாவாக
குறைக்கப்பட்டு விற்பதற்கு ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குற்பட்ட அட்டாளைச்சேனை பாலமுனை ஒலுவில் தைக்காநகர் கோணாவத்தை போன்ற பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ள 11 இறைச்சிக் கடைகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் இத்தீர்மானத்தை புதிய தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா (நபீல்) கொண்டு கூட்டத்தில் தெரிவித்த போது இறைச்சிக் கடை உரிமையாளர்களின் வாதப்பிரதி வாதங்களுக்குப் பின்னர் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர் சமூகநேயன் தமீம்ஆப்தீனும் உடனிருந்து இறைச்சியின் விலையினை குறைப்பதற்கான பல்வேறுபட்ட நியாயங்களை சபையில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளைச்சைசேனை பிரதேச சபையின் புதிய தவிசாளரின் இவ் அதிரடி நடவடிக்கைக்கு காரணமாக செயற்பட்ட தவிசாளர் அமானுல்லாவிற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஒலுவில் பாலமுனை சின்னப்பாலமுனை தைக்காநகர் மீலாத்நகர் சம்புநகர் ஆலம்குளம் கோணாவத்தைப் பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர் சமூகநேயன் தமீம்ஆப்தீன் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ்,உத்தியோகத்தர் கள்
உட்பட இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை அக்கரைப்பற்று பிரதேசசபை மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபைகளில் தனி இறைச்சியின் விலை ரூபா 800 இற்கு விற்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டு தற்போது இறைச்சிக்கடைகளில் குறிப்பிட்ட விலைக்கு மாட்டிறைச்சி விற்பதாக தெரியவருகின்றது.

0 comments:
Post a Comment