• Latest News

    April 20, 2018

    கொழும்பில் இரு பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்கள் கைது

    கொழும்பு - பாலத்துறை பகுதியில் பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் இன்று காலை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

    அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    கொழும்பு - மட்டக்குளி  பகுதியைச் சேர்ந்த 23  மற்றும் 26 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மாகதுரே மதுஷ் என்றழைக்கப்படும் பிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரின் கையாட்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொழும்பில் இரு பாதாள உலக கோஷ்டி உறுப்பினர்கள் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top