• Latest News

    April 21, 2018

    சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்திய மத்திய அமைச்சரவை அங்கீகாரம்

    12 வயதுக்குட்பட்ட சிறுவர் பாலியல் குற்றச்செயல்கள் தொடர்புடையோருக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

    இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 8 வயது சிறுமி மதஸ்தலம் ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

    இதேவேளை பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

    இதனையடுத்தே, 12 வயதுக்குட்பட்ட சிறுவர் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற அவசர சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க இந்திய மத்திய அமைச்சரவை அங்கீகாரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top