சுரேஸ்;
யாழ்ப்பாணத்திற்கு கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக்குளத்தின் தண்ணீரை கொடுக்க முடியாது. இதனால், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். என இரணைமடுத் திட்டத்தின் கீழ் நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இரணமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீரைக் கொண்டு செல்லுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டைமைப்பினைச் சேர்ந்த சிறிதரன் எம்.பிக்கும், வடமாகாண முதலமைச்சருக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்நிலையிலேயே கிளிநொச்சி விவசாயிகள் இரணைமடு குளத்தின் நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுவதற்கு விவசாயிகள் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள்.
தங்களின் இந்த நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக இன்று (18) கரைச்சிப் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் விவசாயிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்கள்.இரணமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீரைக் கொண்டு செல்லுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற நிலையில், இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டைமைப்பினைச் சேர்ந்த சிறிதரன் எம்.பிக்கும், வடமாகாண முதலமைச்சருக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்நிலையிலேயே கிளிநொச்சி விவசாயிகள் இரணைமடு குளத்தின் நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுவதற்கு விவசாயிகள் தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள்.
இப்பிரச்சினை பற்றி விவசாயிகள் அமைப்பின; உபதலைவர் சி. சிவப்பிரகாசம் விளக்கம் தெரிவிக்கம் தெரிவிக்கையில்
இரணைமடுக் குளத்தின் நீரை நம்பியே ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தின் நெல் உற்பத்தியில் இரணைமடுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையே பெருமளவு பங்கை வகிக்கின்றது.
சில காலங்களில் குளத்திலிருந்து அதிகமான அளவில் நீர் திறந்துவிடப்படுவது உண்மையென்றாலும் வரட்சியான காலங்களும் ஏற்படுவதுண்டு. இந்த ஆண்டும் நாம் வரட்சியை எதிர்கொண்டுள்ளோம்.
குளத்தைப் புனரைக்க வேண்டிய தேவை இருந்தாலும் அது விவசாயிகளின் நன்மைக்காகவே அமைய வேண்டும். இந்த நிலையில் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தை ஏற்க முடியாது என்றார்

0 comments:
Post a Comment