• Latest News

    May 29, 2018

    ஜே. வி. பி. யின் 20வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌ முன் வைப்பை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கின்றது

    (எஸ்.அஷ்ரப்கான்)
    ஜ‌னாதிப‌தி முறையை மாற்றி பாராளும‌ன்ற‌த்தினால் ஜ‌னாதிப‌தி தெரிவு செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ஜே. வி. பி. யின் 20வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌ முன் வைப்பை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து என்று உலமா கட்சி  விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக உலமா கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் மேலும் தெரிவிக்கும் போது,

    ஜே.வி. பி யின் இத்த‌கைய‌ செய‌லான‌து இந்த‌ நாட்டின் சிறு பான்மை ம‌க்க‌ளுக்கு செய்யும் துரோக‌ம் ம‌ட்டும‌ல்ல‌ ஜே. வி. பி. சிறுபான்மைக்கு எதிரான‌தா என்ற‌ கேள்வியும் எழுகின்ற‌து.

    நாட்டின் ஜ‌னாதிப‌தி முறையை மாற்றி பாராளும‌ன்ற‌த்துக்கு முழு அதிகார‌த்தையும் கொண்டு வ‌ருவ‌த‌ன் மூல‌ம்  சிறுபான்மை ம‌க்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் தீர்வு ம‌ற்றும் சிறுபான்மை ம‌க்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் முற்றாக‌ ஓர‌ங்க‌ட்டுவ‌த‌ற்கான‌ இன‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கையாக‌வே ஜே. வி. பி. யின் இச்செய‌ல் உள்ள‌து.

    இல‌ங்கையில் ஜ‌னாதிப‌தி முறை அறிமுக‌மாகு முன் பாராளும‌ன்ற‌ முறையே அதிகார‌த்தில் இருந்த‌ போது நாட்டில் இன‌ங்க‌ளுக்கிடையில் பாரிய‌ பிர‌ச்சினைக‌ள் உருவான‌தையும் அவ‌ற்றை தீர்க்க‌ முடியாம‌ல் பாராளும‌ன்ற‌ம் த‌டுமாறிய‌தையும் காண்கிறோம். ஆனால் ஜ‌னாதிப‌தி முறை மூல‌ம் நாட்டுக்கும் சிறுபான்மை ம‌க்க‌ளுக்கும் சில‌ ந‌ன்மைக‌ள் கிடைத்த‌மையையும் காண்கிறோம்.

    தீர்வுத்திட்ட‌ம் போன்ற‌ தேசிய‌ பிர‌ச்சினைக‌ளின் போது அவை பாராளும‌ன்றுக்கு சென்றால் இல‌குவில் அவ‌ற்றை பாராளும‌ன்ற‌ம் அனும‌திக்காது. அதுவும் இன‌வாத‌ க‌ட்சிக‌ள் அதிக‌ம் நிறைந்துள்ள‌ ந‌ம‌து பாராளும‌ன்ற‌த்தில் இவை இல‌குவில் ந‌டை பெறாது.

    ஆக‌வே ஜே.வி.பி. இந்த‌ 20 ச‌ட்ட‌ வ‌ரைவை அனைத்து க‌ட்சிக‌ளும் ஒன்றிணைந்து தோற்க‌டிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிறது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜே. வி. பி. யின் 20வ‌து திருத்த‌ச்ச‌ட்ட‌ முன் வைப்பை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கின்றது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top