• Latest News

    May 29, 2018

    தெஹியோவிட்ட தழிழ் வித்தியாலத்தின் கட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் வேலைகள் நடைபெறவில்லை: கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை

    இரண்டு வருடங்களுக்கு முன்னர் மண்சரிவில் பாதிக்கபட்ட தெஹியோவிட்ட தழிழ் வித்தியாலத்தை பிரிதொரு இடத்தில் அமைப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் பணிப்புரைக்கு அமைய  கல்வி அமைச்சு பல்வேறு நடிவடிக்களை மேற்கொண்டு வர்த்தமாணி அறிவித்தல் மூலம் 02 ஏக்கர் காணி பெற்றுக் கொடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டடமாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு புதிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான வரைபடம் உட்பட தேவையான நிதி தொடர்பான ஆவணங்களை கல்வி அமைச்சுக்கு கொடுத்து அதற்காண நிதியை பெற்று பாடசாலை அமைப்பதற்தகான வேலைத்திட்டங்களை ஆரம்பித்து பாடசாலையை தற்போது கட்டி முடிந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை.

    கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் இந்த பாடசாலை மண்சரிவில் பாதிபடைந்த போது அதனை பார்வையிட சென்ற அந்த நிமிடமே இதற்கான பணத்தை ஒதுக்கிவிட்டார் இருந்தும் மகாண சபையின் ஒரு சில குறைபாடுகள் காரணமாக இந்த வேலைத்திட்டம் இழுந்து அடிக்கபட்டு வந்தது. அத்துடன் இந்த வேலைதிட்டத்தை முறையாக முன்னெடுத்து செல்ல நம்மவர்கள் சார்பில் அரசியல் பிரதிநிதிகளும் முன் வரவில்லை. இதனால் பாதிப்படைவது மலையக மாணவர்களே. சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதிகள் இன்மையும் ஒரு பாறிய குறைபாடாகும். பெருற்தோட்ட மக்களுக்கு மத்திய அரசு மூலம்  முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல யாரும் அற்ற அனாதைகளாக இந்த மக்கள் இருக்கின்றனர். எதிர்வரும் காலங்களில் இதை உணர்ந்து வாக்காளர்கள் செயற்பட வேண்டும். அது மட்டுமல்ல மண்சரிவினால் அன்மை காலங்களில் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடுகள் அமைப்பதிலும் அதனை பெற்றுக் கொடுப்பதிலும் இதே போன்று பாரிய பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதற்கு எல்லாம் காரணம் தமிழ் பிரதி நிதித்துவம் இன்மையே. 

    இந்நிலையில் மேற்படி மண்சரிவில் பாதிக்கபட்ட தெஹியோவிட்ட தழிழ் வித்தியாலத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என கருதிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பாடசாலை அமைய பெரும் இடத்திற்கு  அதிரடியாக விஜயம் செய்தார். குறித்த இடத்திற்கு சப்ரகமுவ மாகணத்தின்  கல்வி அமைச்சின் உயர் கல்வி அதிகாரிகள் பொறியியலாளர்கள் தெஹியோவிட்ட கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகள் பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான  சுஜித் பெரேரா திருமதி துஸிதா விஜயமான ஆகியோரை அழைத்து இருந்தார் அவர்களும் பிரசன்னமாகி இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சரின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் மேற்க் கொண்டிருந்தார். தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் வந்திருந்த அதிகாரிகளுடன் இணைந்து ஒதுக்கப்பட்ட காணியையும்  வேலைதிட்டத்திற்கான வரைபடம் ஒதுக்க வேண்டிய நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு இருதியாக இந்த பாடசாலை அமைப்பதற்கு 80 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்தார். இதன் படி கட்டம் கட்டமாக வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பாடசாலையை உடனடியாக அமைக்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படும். 
     
    இது தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர். இந்த பாடசாலை அமைய தாமதித்தற்கு காரணம் நான் அல்ல மண்சரிவு ஏற்பட்டு இந்த பாடசாலையை பார்வையிட்ட உடன் அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் நான் செய்து விட்டேன். மாகாணம் உரிய முறையில் இதனை ஆரம்பிக்காததே தாமதத்திற்கு காரணமாக இருகின்றது. தொடர்ந்தும் தாமதிக்க கூடாது என்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்க் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்க் கொண்டுள்ளேன். தேவையான பணம் உட்பட காணி வழங்கபட்டள்ளது. கூடிய சீக்கரம் வேலைதிட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த வேலைதிட்டம் தொடர்பில் தொடந்து கண்காணிப்பில் இருந்து இந்த பாடசாலையை அமைப்பேன் என்று கூறினார். 


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தெஹியோவிட்ட தழிழ் வித்தியாலத்தின் கட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் வேலைகள் நடைபெறவில்லை: கல்வி இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top