சஹாப்தீன் -
கல்முனை காணிப் பதிவகத்தில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலகத்தின் காணிப் பதிவாளர் இஸட்.நசுறுதீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை காணிப் பதிவகத்தில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாது. இது தவிர இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையர்களின் மேற்குறிப்பிடப்பட்ட பதிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பிரதேச செயலகங்களில் அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்படி பதிவுகளே வழங்கப்படுகின்றன. எனவே அம்பாறை மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள விவாக பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இனிமேல் கல்முனை காணிப் பதிவகத்தில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பொது மக்களின் வசதி கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது மக்கள் மிகுந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றார்.
0 comments:
Post a Comment