எஸ்.றிபான் -
காலத்திற்கு காலம் அரசாங்கம் மாறினாலும் முஸ்லிம்கள் மீதான அணுகு முறைகளில் மாற்றத்தைக் காண முடியவில்லை. முஸ்லி;களின் பிரச்சினைகளும், தேவைகளும் புறக்கணிப்பட்டுக் கொண்டே வருகின்றன. இதே வேளை, முஸ்லிம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் எடுத்துக் கொண்டால் அவர்களின் நடவடிக்கைகளிலும் மாற்றத்தைக் காண முடியவில்லை. காலத்திற்கு காலம் அமையும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளையும், வேறு தேவைகளையும் பெற்றுக் கொண்டு சமூகத்தின் தேவைகளில், பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகளிலும், அமைச்சர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இவர்களில் மாற்றம் ஏற்படாத வரை முஸ்லிம் சமூகத்தின் தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு வராது என்பதே கடந்த கால அனுபவமாக உள்ளது. ஆதலால், முஸ்லிம் சமூகம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு நிச்சயமாக முஸ்லிம்களின் கைககளில்தான் உள்ளன. அரசியல் தலைவர்களும், அமைச்சர்களும் மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இற்றை வரைக்கும் நிறைவேறவில்லை. நீண்ட காலமாக அவகாசம் வழங்கியும் தங்களை மாற்றிக் கொள்ளாத முஸ்லிம் தலைவர்கள் இனியும் மாறுவார்கள் என்று நம்புவதற்கில்லை. ஆதலால், முஸ்லிம்கள் மாற்றத்தை நோக்கி தங்களின் செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைகள்
முஸ்லிம்களுக்கு எதிராக நாடு பூராகவும் பல வன்முறைகள் நடைபெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஆயுதக் குழுக்களினால் பல வன்முறைகள் கட்டவிழத்து விடப்பட்டன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், உயிர்கள், சொத்துகள் தாக்கி அழிக்கப்பட்டன. முஸ்லிம்களை சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றினார்கள். தமிழ் ஆயுதக் குழுக்களின் இந்நடவடிக்கைகளுக்கு தமிழ் இனவாதிகளும் துணையாக இருந்தார்கள். இன்றும் கூட தமிழ் இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதே வேளை, அரச படைகளினாலும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் ஆயுதக் குழுக்களினால் தாக்கப்பட்ட போது இம்மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தார்கள் என்றே கூறுதல் வேண்டும். சிறுசிறு சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற போதிலும் அவை தமிழ் ஆயுதக் குழக்களின் தாக்குதல்களைப் போல் இருக்கவில்லை. அத்தகைய சிறுசிறு சம்பவங்கள் வருவதனை தவிர்க்கவும் முடியாது.
விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்ததன் பின்னர் முழு நாட்டிலும் உள்ள முஸ்லிம்கள் நிம்மதியாக வாழலாமென்று நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கை இன்று வரைக்கும் நிறைவேறவில்லை. இன்று முழு நாட்டிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும், மதவிழும்மியங்களுக்கும், சொத்துக்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் பலத்த அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் காலத்தில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தாக்கப்பட்டதனைப் போன்ற சம்பவங்கள் இன்று வடக்கு, கிழக்கில் நடைபெறவில்லை. ஆனாலும், முஸ்லிம்களின் காணிகளுக்கும், மதவிழுமியங்களைப் பின்பற்றுவதிலும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
இதே வேளை, விடுதலைப் புலிகளைப் போன்று முஸ்லிம்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமது வாழ்விடங்களிலிருந்து விரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை பௌத்த இனவாதிகள் மேற்கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொளுத்திக் கொண்டிருக்கின்றார்கள். பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். பேருவளை, தர்கா நகர், ஜிந்தோட்டை, அம்பாரை, கண்டி, திகன போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியைக் கொண்டதாகவே உள்ளன.
இவ்வாறு செயற்படுகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு சிங்கள அரசியல்வாதிகள் போதிய நடவடிக்கைகளையும், கண்டனங்களையும் விடுக்கவில்லை. ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் கண்டனங்களை விடுத்தாலும், அவை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்குரிய அழுத்தங்களைக் கொடுப்பதற்கு போதிய சக்தியைக் கொண்டிருக்கவில்லை. இது போலவே விடுதலைப் புலிகள் முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது அதனைக் கண்டித்து ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் அறிக்கைகளை விடுத்தார்கள். அன்று அவர்களின் அறிக்கைகள் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் விரோத வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை. ஆகவே, பௌத்த இனவாதத்தின் இன்றைய நடவடிக்கைகளும், விடுதலைப் புலிகளின் அன்றைய நடவடிக்கைகளும் ஒரு திசையை நோக்கியதாகவே உள்ளன.
மேலும், இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகளினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் அங்கிகரித்துக் கொண்டு அல்லது மௌனமாக இருந்து கொண்டிருப்பதனைப் போன்றே, விடுதலைப் புலிகளின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகளும் அங்கிகரித்து இருந்தார்கள்.
தமிழ்ப் பேரினவாதமும், சிங்களப் பேரினவாதமும் வாக்குகளை இலக்கு வைத்தும், பயத்தின் காரணமாகவும் செயற்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் சார்பு வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்கு அவ்வாறு நடந்து கொண்டார்கள். ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அன்றும், இன்றும் ஒரே மாதிரியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் சார்பு வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்கு பதிலாக வேறு சக்திகளை திருப்திபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் கவனத்திற் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் சமூகத்தினைப் பற்றி பேசிக் கொள்வார்கள். தேர்தல் காலங்களில் மக்களின் உணர்வுகளை சூடாக்குவார்கள். தேர்தல் முடிந்ததும் பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்கி தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஒரு சிலரையே ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களையே முஸ்லிம்களின் தலைவர்கள் என்றும் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்காக சமூக உறுப்பினர்களிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எத்தனை காலத்திற்;கு இவ்வாறு செயற்பட முடியும். இந்த செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தை மேலும் சீரழிக்கச் செய்துவிடும். ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் மாற்றுதல் வேண்டும். இவர்களுக்கு வழங்கிய கால அவகாசம் மிக நீண்டதாகும். அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் திருந்தவில்லை என்பதற்காக முஸ்லிம் சமூகமும் திருந்தாது இருக்க முடியாது. தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தங்களை திருத்திக் கொள்ளாது போனால் அவர்களை மாற்றுவதே அடுத்த நடவடிக்கையாகும். அவர்கள் வகித்த இடங்களை புதியவர்களுக்கு வழங்குவதே சிறந்த வழியாகும்.
முஸ்லிம் சமூகத்தினை சீரமைப்பதற்கு பதிலாக முஸ்லிம் கட்சிகளை சீரமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புனரமைப்பு செய்யப்படுகின்றன. அதற்காக கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் ஓடிக் திரிகின்றார்கள். சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களை கட்சியின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு செயற்படும் இவர்கள் திருமலையில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அபாயா பிரச்சினைக்கு காத்திரமாக செயற்படவில்லை. இந்தியாவில் ஆசிபாவின் மீது வன்புணர்வு மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஒரு கட்சி அறிக்கை விடுகின்றது. இதுதான் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடாகும். கட்சிகளை புரனமைக்க எடுக்கும் செய்றபாடுகள் யாவும் தேர்தலை மையப்படுத்தியதாகும், ஆனால், முஸ்லிம் சமூகத்தினை மையப்படுத்திய நடவடிக்கைகள் எதுவும் எந்தவொரு முஸ்லிம் கட்சியாலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராலும் எடுக்கப்படவில்லை.
நஸ்டஈடு
முஸ்லிம்களின் மீது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு இன்று வரைக்கும் பூரணமாக நஸ்டஈடுகள் வழங்கப்படவில்லை. வடக்கு, கிழக்கில் கோடிஸ்வரர்களாகச் இருந்தவர்கள் வன்முறைகளின் பி;ன்னர் ஓட்டாண்டிகளாக மாறினார்கள். முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். 30 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இவர்களின் மீள்குடியேற்றம் இன்று வரைக்கும் பூர்த்தியாகவில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே கடந்த அரசாங்கத்தின் காலத்திலும், இன்றைய அரசாங்கத்தின் காலத்திலும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஸ்டஈடுகள் முறையாக வழங்கப்படவில்லை. அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய அழுத்தங்களை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளவில்லை.
மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது பாhகாப்பு தரப்பினரின் முன்னிலையில் பேருவளை, தர்காநகர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அரசாங்கம் நஸ்டஈடு வழங்கப்படுமென்று தெரிவித்தது. இதுவரைக்கும் நஸ்ஈடு பெற்றுக் கொள்ளாத பலர் உள்ளார்கள்.

இது போலவே காலி - ஜிந்தோட்டையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் முஸ்லிம்களின் 142 சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இதற்கு நஸ்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் முன்வரவில்லை.
அம்பாரை நகரில் 2018 பெப்ரவரியில் பள்ளிவாசலும், கடைகளும் தாக்கப்பட்டன. பள்ளிவாசல் நீங்கலாக முஸ்லிம்களின் 13 சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவ்வாறு சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஸ்டஈடு வழங்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றன. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்தார்கள். அரசாங்க அதிபரைச் சந்தித்தார்கள்.
ஊடகங்களுக்கு முகங்களைக் காட்டினார்கள். அத்தோடு சமூகப் பணியை முடித்துக் கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு ஏற்படும் அழிவுகளில் விளம்பரம் தேடிக் கொள்ளும் அரசியல்வாதிகள் மாற்றப்பட வேண்டும்.
திகன, கண்டி பிரதேசங்களில் 2018 மார்ச் மாதம் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்கைள மேற்கொண்டார்கள். இதன் போது முஸ்லிம்களின் பல கோடி ரூபா சொத்துக்கள் அழிக்கப்பட்டன. கிடைக்கப்பெறும் தகவ்லகளின் அடிப்படையில் 20 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பள்ளேகலே ஜும்ஆப்பள்ளிவாசல் மிகவும் பாரிய அளவில் சேதமாக்கப்பட்டது. 636இற்கும் மேற்பட்ட சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவற்றிக்கு இன்னும் முறையாக நஸ்டஈடு வழங்கப்படவில்லை. முதற் கட்டமாக 125 சொத்து அழிப்புக்கும், இரண்டாம் கட்டமாக 280 சொத்து அழிப்புக்களுக்கும் நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அறியக் கூடியதாக இருக்கின்றன. இந்த நஸ்டஈடுகள் ஒரு இலட்சத்திற்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பள்ளிவாசல்கள் யாவும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக புனரமைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கான உத்தரவாதங்களை வழங்கினார்கள். ஆனால், பள்ளிவாசல்கள் புனரமைப்பு செய்யப்படவில்லை. தற்போது நோன்பு காலம் என்பதனால் முஸ்லிம்களின் ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை போன்ற இறைவழிபாடுகைள மேற்கொள்வதில் அங்குள்ள முஸ்லிம்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இதனையிட்டு முஸ்லிம் அமைச்சர்கள் கவலை கொள்ளவில்லை.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி சேதமடைந்துள்ள பள்ளிவாசல்களை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கு புனர்வாழ்வு அமைச்சர் சுவாமி நாதனைக் கேட்டுள்ளார்.
இதே வேளை, 03 பள்ளிவாசல்களுக்கு ரூபா ஒரு இலட்சத்திற்கும் குறைவான நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இன்னும் 17 பள்ளிவாசல்களுக்கு நஸ்டஈடு வழங்க வேண்டியுள்ளன. பள்ளிவாசல்களின் பதிவு இலக்கம், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றினை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளினால்தான் நஸ்டஈடு வழங்காதிருப்பதற்கு காரணமென்று புனர்வாழ்வு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் உள்ள மிகப் பெரிய குறைபாடுகளில் ஒன்றுதான், தங்களைப் பற்றிய ஆவணப்படுத்தலை சரியாக மேற்கொள்ளாமை. முஸ்லிம்கள் பல தடவைகள் தாக்கப்பட்டுள்ளார்கள், கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்துள்ளார்கள். ஆனால், அவை பற்றிய பூரண தகவல்கள் முஸ்லிம்களிடையே இல்லை. இதனை முஸ்லிம் புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த இரண்டு தரப்பினரும் வேறுபட்ட திசைகளிலேயே சென்று கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக அரசியல்வாதிகள் தங்கள் சமூகத்தின் எல்லா தகவல்களையும் ஆவணமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவை குறித்து அரசாங்கத்திடம் எடுத்துக் கூறலாம். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும் வெறும் கைகளையே வைத்துள்ளார்கள்.
தங்களைப் பற்றி முகநூல்களில் எழுதுவதற்கும், பத்திரிகைகளில் எழுதுவதற்கும் சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் தகவல்களை திரட்டுவதற்கு ஆட்களை நியமிக்கவில்லை. இவை பற்றி எடுத்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகளில்லை. முஸ்லிம் சமூகத்தின் தகவல்கள் தங்களின் இயலாமையை காட்டிவிடும். முஸ்லிம்களுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கின்றார்களே என்று கேள்வி கேட்பார்கள் என்று அச்சப்படுகின்றார்களா என்று எண்ணவும் தோன்றுகின்றது. மறுபுறத்தில் இவர்கள் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடைமொழியைக் கொடுக்கலாமே தவிர முஸ்லிம் சமூகத்தின் விசுவாசிகள் என்று அடைமொழி கொடுக்க முடியாது.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகளும், தலைவர்களும், புத்திஜீவிகளும் உள்ளார்கள். சமூக உறுப்பினர்கள் சமூக மேம்பாட்டிற்கு உழைக்காத அரசியல்வாதிகளையே தலையில் வைத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்கில்லை. ஆதலால், புதிய தலைவர்கள் உருவாகக்கப்பட வேண்டும்;;. இதற்கு சமூக உறுப்பினர்கள் தங்களில் மாற்றத்தைக் கெண்டு வர வேண்டும். தனிநபர்களில் மாற்றம் ஏற்படாத வரையில் புரட்சிகளும் ஏற்படுவதில்லை. ஆதலால், முஸ்லிம் சமூகம் இன்றைய நிலையிலிருந்து தம்மை மாற்றிக் கொள்ள முன் வருதல் வேண்டும். மாற்றம் ஒன்றே விடிவினைத் தேடித் தரும்.
Vidivelli 18.05.2018

0 comments:
Post a Comment