• Latest News

    May 20, 2018

    மாணவர் இருவர் உட்பட ஐந்து பேருக்கு விளக்கமறியல்

    மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் தங்க நகைகளைக் கொள்ளையிட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவர் உட்பட ஐவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா நேற்று மாலை உத்தரவிட்டார்.

    ஆரையம்பதி, அமரசிங்கம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 15ஆம் திகதி  பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

    இதற்கமைய, மாணவர்கள் இருவர், குறித்த வீட்டில் பணிபுரிந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் உட்பட ஐந்து பேரை  பொலிஸாரால் கைது செய்தனர்.

    குறித்த சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட தங்க நகைகள் நகைக் கடைகளில் விற்பனை செய்திருந்தமை பொஸில் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து பதினெட்டரை பவுன் நகைகள் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
    மேற்படி ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸார் இவர்கள், நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிட்டாhர்.
    இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாணவர் இருவர் உட்பட ஐந்து பேருக்கு விளக்கமறியல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top