ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ள தீவு ஒன்றை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் பொறுப்பேற்றுள்ள சீன நிறுவனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட தீவை தம்மிடம் ஒப்படைப்பதற்கு தவறும் பட்சத்தில், உடன்பட்டுள்ள அடுத்த கட்ட தவணைக்கான உதவித் தொகை 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட மாட்டோம் என்று சீன நிறுவனம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உதவித் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த் ஆங்கிய ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 110 ஹெக்டெயார் பரப்பளவைக் கொண்ட சம்பந்தப்பட்ட தீவு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ள இந்த விசேட தீவின் தற்போதைய பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையில் இந்த தீவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் புவியியல் எல்லைக்கு உட்பட்டதாக இந்த தீவை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், தென்மாகாண சபையின் அனுமதியை இதற்காகப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment