டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆறு முறை தங்கப் பதக்கம் வெல்லும் முதல் பெண் மேரி கோம் ஆவார்.
இதற்கு முன்னதாக கோம் மற்றும் அயர்லாந்தின் கேட்டி டெய்லர் ஐந்து பட்டங்களை வென்றதே உலக சாதனையாக இருந்தது.
கடைசியாக 2010இல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற கோம், அதற்கு முன்னர் 2002, 2005, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார்.
48 கிலோ லைட் வெயிட் பிரிவில் உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடாவை, சனிக்கிழமை மாலை நடந்த போட்டியில் கோம் வென்றார். 22 வயதாகும் ஹன்னா, 35 வயதாகும் மேரி கோமைவிட 13 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த மேரி கோம் மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.
மேரி கோமின் வாழ்க்கை வரலாறு இந்தியில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது.
1998ஆம் ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங், பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றதை அடுத்து, தனக்கும் குத்துச் சண்டை பயில வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக மேரி கோம் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மபூஷன் உட்பட பல விருதுகளை மேரி கோம் பெற்றுள்ளார்.
லண்டனில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 2014இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக தங்கம் வென்றார் கோம்.
BBC -
BBC -
0 comments:
Post a Comment