அபூ இன்ஷப்: சம்மாந்துறை 119, மலையார் வீதி விளினையடி - 01ல் இயங்கி வருகின்ற அல்-முனீர் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் அல்-ஆலிம் கற்கை நெறிக்கு 2015ம் ஆண்டுக்கான புதிய மாணவியர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அடிப்படைத் தகைமையாக ஒழுக்கமுள்ள முஸ்லீம் மாணவியாக இருத்தல், 2015ம் ஆண்டில் 7ம் தரத்தில் கற்கக் கூடியவராகவும், அல்குர்ஆனை நன்றாக ஓதக் கூடியவராகவும் தமிழை நன்றாக வாசிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விலாசமுடைய காரியாலத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து அவ்விலாசத்துக்கே 2014 டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் தபாலில் அல்லது நேரடியாக அனுப்பிவைக்கலாம்.
நேர்முகப்பரீட்சைக்கு சமூகம் கொடுக்கும் போது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப் பிரதியுடன் போட்டோப் பிரதியும், 2015ம் ஆண்டில் 7ம் தரத்தில் கற்க கூடியவர் என்பதை உறுதிப்படுத்திய அதிபரின் கடிதம், 2014ம் ஆண்டுக்குரிய பாடசாலை தேற்சி அறிக்கை, அல்குர்ஆன் ஓதியதற்கான சான்றிதழ் என்பவற்றுடன் சமுகம் கொடுக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு 0775980680 தொடர்பு கொள்ளவும்.

0 comments:
Post a Comment