• Latest News

    November 28, 2018

    இலங்கைக்குள் புகுந்தது ஐ நா !

    இராமசாமி சிவராரசா-
    இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து கொழும்பு வந்திருப்பதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

    கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மற்றும் இதர அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ள அவர் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்தும் அரசியல் பதற்ற நிலையை தணிப்பது பற்றியும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

    நேபாளம் ,ஜப்பான் குரோஷியா ,அர்மேனியா உட்பட்ட நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்பதவிகளை வகித்த இவர் அரசியல் நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இலங்கை விடயத்தை நேரடியாகவே கையாள ஐ நா பொதுச் செயலாளரால் அனுப்பப்பட்டிருக்கக் கூடுமென பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்...

    ஐ நா வே நேரடியாக தலையிட்டிருப்பதால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது..!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கைக்குள் புகுந்தது ஐ நா ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top