• Latest News

    June 11, 2023

    தன்னைக் 'கடவுள்' என்ற சாமியார் பிரித்தானியாவில் கைது

    பிரித்தானியாவில் ஒரு தொகுதி ஈழத் தமிழர்கள் மத்தியில் பிரபல்யமான சாமியார் முரளிகிருஸ்ணன் என்பவரை Colindale பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
    தன்னைக் 'கடவுள்' என்றும் 'கடவுளின் அவதாரம்' என்றும் கூறியபடி லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி செயற்பட்டுவந்த இந்தச் சாமியார் கடந்த 09.06.2023 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

    கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இந்த சாமியார் மீது அண்மைக்காலமாக பலவிதமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    தென் இந்திய ஊடகங்களான 'ஜெயா தொலைக்காட்சி' மற்றும் 'மாலைமுரசம்' போன்ற ஊடகங்கள், இந்தச் சாமியார் செய்ததாக் கூறப்படுகின்ற பல பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகளை வெளியிட்டு, அவர் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.வெளியேறிய சீடர்கள்

    'இலங்கையில் தனிநாடு வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழியில் வந்த ஈழத் தமிழர்களா இது போன்ற போலிச்சாமியாரிடம் பக்தர்களாக இருக்கின்றார்கள்.." என்று கோபத்துடன் கேள்வியெழுப்பியிருந்தது தென் இந்தியாவின் மாலை முரசம் ஊடகம்.

    இந்த விடயம் தொடர்பாக முரளிகிருஸ்ண சுவாமிகளின் கோவில் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர்கள் யாருமே கைது விடயம் சம்பந்தமாகப் பேசுவதற்கு மறுத்து வருகின்றனர். அவரின் சில பக்தர்களைத் தொடர்பு கொண்டு வினவிய பொழுது, சுவாமி மீது பல பாலியல் வீடியோக்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தது உண்மைதான் என்றும், அவரின் சீடர்களாக இருந்து வந்த பலர் தற்பொழுது அவரை விட்டு வெளியேறி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். "ஈழத் தமிழர்கள் அரசியலில்தான் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் என்றால், தாம் கடவுள் என்று நம்பியவரும் தங்களை ஏமாற்றிவிட்டார்." என்று கண்கலங்கியபடி முரளிகிருஸ்ண சுவாமிகளின் முன்னாள் பக்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தன்னைக் 'கடவுள்' என்ற சாமியார் பிரித்தானியாவில் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top