வரலாற்றில் முதற் தடவையாக ஜனாதிபதி ஒருவாின் முடிவை சவாலுக்கு உட்படுத்திய தீர்ப்பு இதுவென பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தொிவித்தார்.
ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, மலையக ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் செய்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைத்தமை சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னர் ஊடவியலாளர்களுக்கு கருத்துத் தொிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தொிவித்தார்.
அவர் மேலும் தொிவிக்கையில்,
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு 19வது திருத்தத்திற்கு முன்னர் இருந்தது. ஆனால், 19வது திருத்தத்ிதல் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஆயினும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமையை சவாலுக்கு உட்படுத்திய முதலாவதும், முக்கியத்துவமானதொரு தீர்ப்பாகவும் இது இருக்கின்றது.
மேலும், இந்த தீர்ப்பை ஏழு நீதியரசர்களும் ஏகமனதாக இந்த முடிவினை எடுத்து தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

0 comments:
Post a Comment