நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
18இ 23இ 24 மற்றும் 25 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment