செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம்
நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
நவம்பர் 5-ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது.

0 comments:
Post a Comment