மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பதுளை - பெரகலை வீதி, எல்ல –
வெல்லவாய வீதி, பதுளை - லுணுகலை வீதி, பதுளை - ஸ்பிறிங்வெலி வீதிகளில் மண்
சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளை ஓயா பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றமையினால் இதுவரையில்
23 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த வகையில்
இதுவரை பதுளை மாநகருக்கண்மையிலுள்ள சுமனதிஸ்ஸ கம, ஓயவத்தை ஆகிய கிராமங்கள்
வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment