தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆணுறுப்பையும்
விதைகளையும் கத்திரிக்கோலால் வெட்டித் துண்டித்துள்ளார். தனது கணவன்
மற்றொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததால் அவரின்
அந்தரங்க உறுப்புகளை இவ்வாறு துண்டித்தாராம்.
இரவு 8.50 மணியளவில் பொலிஸார் தகவல் கிடைத்து மேற்படி வீட்டுக்குச்
சென்றதாகவும், குறித்த நபர் இரத்தம் வழிந்தோடிய நிலையில், தனது மனைவி
மேலும் வன்முறைகளில் ஈடுபடலாம் எனும் அச்சத்தில் கழிவறையில்
ஒழித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், துண்டிக்கப்பட்ட அவரின் அந்தரங்க உறுப்புகளை
கண்டுபிடிக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment