• Latest News

    August 09, 2019

    2021இல் இந்தியன் - 02 வெளியீடு

    2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. சில நாள் படப்பிடிப்புடன் படத்தை நிறுத்திவிட்டார்கள். அதன்பின் படப்பிடிப்பு ஆரம்பமாகுமா அல்லது படமே நின்று போகுமா என பலருக்கும் சந்தேகம் வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது என கமல்ஹாசன் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்.
    படத்தில் காஜல் அகர்வால் தவிர, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் ஆகியோரும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. சுமார் ஒரு வருட காலம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் படத்தை 2021 கோடை விடுமுறையில் வெளியிடலாம் என முடிவு செய்திருப்பதாகத் தகவல்.
    இப்படத்துடன் கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் நடிக்கப் போகிறார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2021இல் இந்தியன் - 02 வெளியீடு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top